ககன்யான் மாதிரி விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் முதல் ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது. 3 முறை விண்கலம் ஏவும் பணி தள்ளிப் போன நிலையில், ககன்யான் மாதிரி விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
மாதிரி விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, நமது தேசம் விண்வெளித் துறையில் அதன் அடுத்த மாபெரும் முன்னேற்றத்தை காண தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
ககன்யானின் TV-D1 சோதனை விண்கலம் ஏவப்பட்டது நமது விஞ்ஞானிகளுக்கும், குடிமக்களுக்கும் கிடைத்த முக்கியமான வெற்றி . இந்த நிறைவான தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அமித் ஷா கூறியுள்ளார்.