இளைஞர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் சிந்தியா பள்ளி விழா 125 வது நிறுவன தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடிகலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
இங்கு ஒவ்வொரு முறையும் நான் குவாலியர் நகருக்கு வரும் போது மகிழ்ச்சி அடைகிறேன். நம் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மாதவரராவ் சிந்தியா குடும்பம் நம் நாட்டிற்கு பெரும் பங்காற்றியுள்ளது.
நம் இளைஞர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நம் பாரதம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை என்றார்.
கடந்த தசாப்தத்தில், நாட்டின் முன்னோடியில்லாத நீண்ட கால திட்டமிடல் அற்புதமான முடிவுகளை விளைவித்துள்ளது.
இன்றைய இளைஞர்கள் செழிக்க நாட்டில் சாதகமான சூழலை உருவாக்குவதே எங்கள் முயற்சி.
இன்று இந்தியா எதைச் செய்தாலும், அதை பெரிய அளவில் செய்து வருகிறது”, என்று குறிப்பிட்டார், மாணவர்களே கனவுகள் மற்றும் தீர்மானங்களைப் பற்றி பெரிதாக சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “உங்கள் கனவு எனது தீர்மானம்”, என்று கூறினார், மேலும் மாணவர்கள் தங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் நமோ செயலி மூலம் தன்னுடன் பகிர்ந்து கொள்ளலாம், வாட்ஸ்அப்பில் இணையுமாறு பரிந்துரைத்தார்.