யார் சிறந்த பீல்டர் என்பதை புதிய வகையில் வெளிப்படுத்திய பிசிசிஐ
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் முடிந்தவுடன் இந்திய அணி வீரர்களில் அன்றையப் போட்டியில் சிறந்த பீல்டர் யார் என்று பிசிசிஐ – ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தர்மசாலா மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே 21 வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நேற்றையப் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கான்வேய் 4 வது ஓவரில் முகமது ஷமியின் பந்தை அடித்தார் அப்போது பீலடிங்கில் ஸ்கொயர் லெக்கில் நின்றிந்த ஸ்ரேயாஸ் ஐயர் பாய்ந்து அந்த பந்தை பிடித்தார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரை சிறந்த பீல்டராக தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் யார் அந்த சிறந்த பில்டர் என்று வித்தியாசமான முறையில் தெரியப்படுத்தி வந்தனர். அதில் இந்த முறை மைதானத்தில் இருக்கும் ஸ்பைடர் கேமராவில் தங்க பதக்கத்தையும் ஸ்ரேயாஸ் ஐயரின் புகைப் படத்தையும் வைத்து கொண்டு வந்தனர். இதைக் கண்ட வீரர்கள் உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.