மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் முக்தியடைந்தார். அவரது மறைவுக்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் மடலை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் நிர்வாகிகளுடன் இணைந்து மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி பீடத்திற்குச் சென்றனர்.
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் முக்தியடைந்ததை அடுத்து, நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் விடுத்துள்ள இரங்கல் மடலை, மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு @Murugan_MoS அவர்கள் மற்றும் @BJP4Tamilnadu நிர்வாகிகளுடன்… https://t.co/tuz7EZ0s6I
— K.Annamalai (@annamalai_k) October 23, 2023
அங்கு, அடிகளாரின் மனைவியர் லட்சுமி அம்மாள் மற்றும் அவரது மகன்களிடம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் கடிதத்தை நேரில் வழங்கினர்.
மேலும், தவத்திரு அடிகளார் அவர்களது உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது ஆன்மீக வழிகாட்டுதல் என்றும் நமக்குத் துணையிருக்கும் என ஆறுதல் தெரிவித்தனர்.