உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 283 ரன்களை எடுத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று நடைபெற்று வருகிறது. இதில் 22 வது லீக் போட்டி சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பேட்டிங்யை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.
இதில் இமாம்-உல்-ஹக் 10 வது ஓவரில் 22 பந்துகளில் 17 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து சிறப்பாக விளையாடி வந்த அப்துல்லா ஷபீக் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 75 பந்துகளில் 58 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவர்களை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். இதில் முகமது ரிஸ்வான் 10 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய சவுத் ஷகீல் 3 பௌண்டரீஸ் உடன் 34 பந்துகளில் 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து ஷதாப் கான் களமிறங்கினார். ஷதாப் கான் மற்றும் பாபர் ஆசாம் இணை சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 41 வது ஓவரில் பாபர் ஆசாம் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து 92 பந்துகளில் 74 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய இப்திகார் அகமது சிறப்பாக விலைஅய்டி வந்த நிலையில் 2 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் அடித்து 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷதாப் கான் 38 பந்துகளில் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணியில் நூர் அகமது 3 விக்கெட்களும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்களும், முகமது நபி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்களை எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற 283 ரன்கள் இலக்காக உள்ளது.