டெல்லியில் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர் ரஃபேல் மரியானோ கிராஸி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
அமைதி மற்றும் வளர்ச்சிக்காக அணுசக்தியை பாதுகாப்பாக பயன்படுத்துவதில் இந்தியாவின் நிலையான உறுதிப்பாட்டை பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார். நாட்டின் எரிசக்தி கலவையின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுசக்தி உற்பத்தி திறனின் பங்கை அதிகரிப்பதற்கான இந்தியாவின் லட்சிய இலக்குகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.
ஒரு பொறுப்பான அணுசக்தி வலிமையாக இந்தியாவின் இன்றியமையாத சாதனையை தலைமை இயக்குநர் கிராஸி பாராட்டினார். அணுசக்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை அவர் பாராட்டினார். குறிப்பாக உள்நாட்டு அணுமின் நிலையங்களின் மேம்பாடு மற்றும் நிலைநிறுத்தலை எடுத்துரைத்தார். சமூக நலனுக்கான சிவில் அணுசக்தி பயன்பாடுகளில் இந்தியாவின் உலகளாவிய தலைமைப் பங்கை அவர் அங்கீகரித்தார்.
சுகாதாரம், உணவு, நீர் சுத்திகரிப்பு, பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட மனித சமுதாயத்திற்கான சவால்களை எதிர்கொள்ள அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இதில் அடங்கும்.
சிறிய மாடுலர் அணு உலைகள் மற்றும் மைக்ரோ-அணு உலைகள் உள்பட கடமைகளை நிறைவேற்றுவதில் அணுசக்தியின் பங்கை விரிவுபடுத்துவது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
சர்வதேச அணு எரிசக்தி முகைமைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த கூட்டாண்மைக்கு தலைமை இயக்குநர் கிராஸி தனது பாராட்டைத் தெரிவித்தார்.
பல நாடுகளுக்கு உதவிய இந்தியாவின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அவர் பாராட்டினார். வளரும் நாடுகளில் சிவில் அணுசக்தி தொழில்நுட்ப பயன்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு இந்தியாவுக்கும், சர்வதேச அணுசக்தி முகமைக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராய இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.