உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் வெற்றி !
Oct 26, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் வெற்றி !

Web Desk by Web Desk
Oct 24, 2023, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 22 வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றிப் பெற்றது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 22 வது லீக் போட்டி சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பேட்டிங்யை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.

இதில் இமாம்-உல்-ஹக் 10 வது ஓவரில் 22 பந்துகளில் 17 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து சிறப்பாக விளையாடி வந்த அப்துல்லா ஷபீக் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 75 பந்துகளில் 58 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். இதில் முகமது ரிஸ்வான் 10 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய சவுத் ஷகீல் 3 பௌண்டரீஸ் உடன் 34 பந்துகளில் 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து ஷதாப் கான் களமிறங்கினார். ஷதாப் கான் மற்றும் பாபர் ஆசாம் இணை சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 41 வது ஓவரில் பாபர் ஆசாம் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து 92 பந்துகளில் 74 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய இப்திகார் அகமது சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 2 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் அடித்து 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷதாப் கான் 38 பந்துகளில் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணியில் நூர் அகமது 3 விக்கெட்களும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்களும், முகமது நபி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்களை எடுத்தது.

இதைத் தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர்.

இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 53 பந்துகளில் 65 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, இப்ராஹிம் சத்ரான் 113 பந்துகளில் 87 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இவர்களை தொடர்ந்து ரஹ்மத் ஷா மற்றும் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதில் ரஹ்மத் ஷா 84 பந்துகளில் 77 ரன்களும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 45 பந்துகளில் 48 ரன்களும் அடித்தனர்.

பாகிஸ்தான் அணியில் அப்ரிடி மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 87 ரன்களை அடித்த இப்ராஹிம் சத்ரான்னுக்கு வழங்கப்பட்டது.

Tags: ICC World Cuppakistan vs afghanistan
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

இனி இலங்கைக்கு விசா இல்லாமலேயே செல்லலாம் !

Related News

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies