சென்னையில் இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தி காவல்துறை அதிகாரியை ஏன் டிஸ்மிஸ் செய்யவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் ஆர்வலர்களிடமிருந்து தேசிய கொடியை பறித்து குப்பை தொட்டியில் வீசிய தேச விரோதியை ஏன் டிஸ்மிஸ் செய்யாமல் இருக்கிறது தமிழக அரசு மற்றும் DGP என்று விளக்கமளிக்க வேண்டும்.
— H Raja (@HRajaBJP) October 24, 2023
இந்த போட்டியைக் காண வரும் ரசிகர்களில் சிலர், மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை எடுத்து வருவதாகவும், பாலஸ்தீனம், காலிஸ்தான் ஆகிய விவகாரங்களுக்கு ஆதரவான பதாகைகளை எடுத்து வருவதாகவும் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நாகராஜ் என்பவர், சோதனையில் ஈடுபட்ட போது, ரசிகர்கள் சிலர் எடுத்துச் சென்ற இந்தியத் தேசிக் கொடிகளை பிடுங்கி குப்பைத் தொட்டியில் தூக்கி வீச முயன்றார்.
இதற்கு ரசிகர்கள் கடும் ஆட்சேபம் தெரிவிக்கவே, தேசியக் கொடியைக் குப்பையில் வீசாமல், காவல்துறை வாகனத்தில் வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சர்ச்சையில் சிக்கிய காவல்துறை எஸ்.ஐ.நாகராஜை, கண்ரோல் ரூம்மிற்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், இந்தியத் தேசியக் கொடியைக் குப்பைத் தொட்டியில் வீச முயன்ற காவல்துறையைச் சேர்ந்தவரை ஏன் டிஸ்மிஸ் செய்யவில்லை எனத் தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெ.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெ.ராஜா தனது எக்ஸ் பதிவில்,
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் ஆர்வலர்களிடமிருந்து தேசியக் கொடியைப் பறித்து குப்பைத் தொட்டியில் வீசிய தேச விரோதியை ஏன் டிஸ்மிஸ் செய்யாமல் இருக்கிறது தமிழக அரசு மற்றும் DGP என்று விளக்கமளிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.