அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற விமானம் எது என்றால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், அது அலாஸ்கா ஏர்லைன்ஸ் என்று. காரணம், அந்த அளவு அந்த விமானம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றது.
காரணம், பயணிகளிடம் உபசரிப்பு, சரியான நேரத்தில் இயக்குதல், வெளிப்படையான கட்டண விவரங்களே. இப்படி பெருமை வாய்ந்த விமானத்திற்குத்தான் இப்போது மிகப் பெரிய சோதனை வந்துள்ளது.
அதாவது, ஹாரிஜான் ஏர்ஜெட் விமானம் வாசிங்டனில் இருந்து ஜான் பிரான்சிஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது, விமான இன்ஜினை ஆப் செய்ய முயன்றார் முன்னாள் பைலட் ஜோசப் டேவிட் எமராசன் என்பவர். விமானத்தில் தீயணைப்பான் கைப்பிடிகளை இழுத்து இன்ஜின்களை அணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இதைப் பார்த்த பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே குதித்தால் உயிர் போய்விடும். குதிக்காவிட்டாலும் உயிர் போய் விடும் என்ன செய்வது என தெரியாமல் கடவுளே காப்பாற்று என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பீதியில் உறைந்து போனார்கள்.
இதையடுத்து சாதுரியமாகச் செயல்பட்ட விமானி, ஜோசப் டேவிட் எமர்சனை சமாதானம் செய்து, விமானத்தைப் பத்திரமாக தரையிறக்கினார்.
அடுத்த நில நொடிகளில் ஜோசப் டேவிட் எமராசன் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விமானத்தில் இருந்து மின்னல் வேகத்தில் வெளியேறிய பயணிகள், இந்த விமானப் பயணத்தை எங்கள் வாழ்கையில் மறக்கவே முடியாது எனத் திகிலில் இருந்து மீளமுடியாமல் தெரிவித்தனர்.