பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு: பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!
Sep 22, 2026, 06:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு: பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 05:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரிட்டனில் நடந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‛ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதற்கு சரியான பாடம் கற்பிக்க இஸ்ரேல் அசுரத் தாக்குதலை நடத்தி வருகிறது. 18-வது நாளாக நடந்து வரும் இப்போரில் இஸ்ரேலியர்களின் இறப்பைவிட, பாலஸ்தீனியர்களின் இறப்பு 4 மடங்கு அதிகமாக இருக்கிறது.

இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள அத்தனை உரிமையும் இருக்கிறது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதேபோல, காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டன் நாட்டில் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர். இப்பேரணியில் பங்கேற்றவர்கள், ‘ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதுகுறித்த வீடியோ அந்நாட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, ஜிகாத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வார இறுதியில் பிரிட்டன் நகர வீதிகளில் வெறுப்புணர்வை பார்க்க முடிந்தது. பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது யூதர்களுக்கு மட்டும் ஏற்பட்ட அச்சுறுத்தல் அல்ல.

பிரிட்டனின் ஜனநாயக மாண்புகளுக்கும் சேர்த்து ஏற்பட்ட அச்சுறுத்தலாகும். நமது நாட்டில் யூதர்களுக்கு எதிரான மிரட்டலை சகித்துக் கொள்ள முடியாது. பிரிவினைவாதம் தலைதூக்காமல் இருக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இப்பேரணியின்போது சீர்குலைவு மற்றும் சில வெறுக்கத்தக்க பேச்சுகள் இருந்தன. பேரணியின்போது ஏற்பட்ட மோதலில் 5 போலீஸார் லேசான காயமடைந்தனர். ஜிகாத்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வீடியோக்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: britainPM Rishi sunak
Share
Tweet
SendShare
Previous Post

விமான இன்ஜினை ஆப் செய்ய முயன்ற முன்னாள் பைலட்!

Next Post

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெ.பி.நட்டா ஆய்வு!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies