சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடியை அவமதித்தற்கு (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தேசிய மாணவர் அமைப்பின் தென் தமிழகம், மாநில இணைச் செயலாளர் ஹரிகிருஷ்ண குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, 23-ம் தேதி அன்று மூவர்ணக் கொடியைக் குப்பைத் தொட்டியில் வீசிய அவமரியாதை செயலுக்கு (ABVP) தேசிய மாணவர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
பாரதத்தின் தேசியக் கொடி பார்வையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. தமிழக காவல்துறை மற்றும் (TNCA) திமுகவைச் சேர்ந்த அசோக் சிகாமணியின் தலைமையில், நமது மூவர்ணக் கொடியின் கண்ணியத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதை ஆகும்.
மூவர்ணக் கொடியை அவமதித்ததற்காக திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். மூவர்ணக் கொடியை அவமதித்த தமிழக காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மண்ணிலேயே இதுபோன்ற செயல்களைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.
நமது தேசியக் கொடி மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. எனவே, அதை அவமதிக்கும் எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாது இது ஒரு சாதாரணமான செயலாகக் கடந்து போக முடியாது.
நமது தேசிய கொடியை நம் நாட்டுக்குள்ளே அவமதிப்பது வெட்கக்கேடானது. இது சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்சினை அல்ல. நமது தேசியக் கொடிக்கு இதுபோன்ற அவமரியாதையைக் காண்பது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் மூவர்ணக் கொடியின் புனிதத்தை நிலைநிறுத்துவதற்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வதற்கும் (ABVP) ஏபிவிபி உறுதியுடன் உள்ளது.
நமது தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரத நாட்டு மக்களிடம் திமுக அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. தேசியக் கொடியினை காப்பாதற்கு உயிர் நீத்த கொடிகாத்த குமரன் வாழ்ந்த மண்ணில் தேசியக் கொடிக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தைத் துடைப்பதற்கு நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை (ABVP) ஏபிவிபி நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.