பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த தீப்திக்கு பாரத பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பதக்கங்களை குவித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
இன்று பெண்களுக்கான 400 மீ-டி 20 இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக தீப்தி ஜீவன்ஜி கலந்துக் கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதில் தீப்தி ஜீவன்ஜி 56.69 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். இதில் தாய்லாந்தை சேர்ந்த ஒராவன் கைசிங் வெள்ளி பதக்கத்தையும், ஜப்பான்னை சேர்ந்த நிய்னா கன்னோ வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார்.
மேலும் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர்கனையை பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீ-டி20 போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தீப்திக்கு வாழ்த்துகள், அவருடைய ஆத்மாத்தமான விளையாட்டு அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. நம் அனைவரையும் பெருமைப்படுத்திய தீப்திக்கு பாராட்டுகள் ” என்று பாராட்டுத் தெரிவித்தார்.