2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
எஸ்பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் பொருளாதாரம் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலக பொருளாதாரத்தில் இந்தியா தன்னைதானே உயர்த்திக்கொள்ளும் நிலையில் உள்ளதாகவும் 2030ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை முந்தி உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022ஆண்டில் 3.5 டிரில்லியன் டாலராக இருந்ததாகவும், இது அடுத்த பத்தாண்டுகளில் இருமடங்காக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில், அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருகிறது. நடுத்தர வகுப்பினர் செலவழிப்பது அதிகரித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு இருமடங்காக உயர்நதுள்ளதே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.