சென்னை திருவெற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர். இவருக்கு உதவியாளராக இருப்பவர் தமிழ் இன்பன்.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர். இவருக்கு உதவியாளராக இருப்பவர் தமிழ் இன்பன் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், நான் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தேன்.
அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு பேர் என்னை ஆபாச வார்த்தைகள் சொல்லித் திட்டி தாக்கிவிட்டு ஓடிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உடனே வழக்குப் பதிவு செய்த காவலர், தமிழ் இன்பனைத் தாக்கியவர்கள் யார் என விசாரணை நடத்திய போது, முன்னாள் வட்டச் செயலாளர் ஆறுமுகம் மகன் சசிகுமார், அவரது சித்தப்பா மகன் தீனதயாளன் எனத் தெரிய வரவே, அவர்களை உடனே கைது செய்துள்ளனர்.
திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக எம்எல்ஏ பிஏவை தாக்கியவர்கள் மீது உடனே வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் காவல்துறை, அப்பாவி மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது மட்டும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.