குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்துவதாகவும், பயனர்களை தவறாக வழிநடத்துவதாக மெட்டா நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கலிஃபோர்னியா, நியூ யார்க் உள்ளிட்ட அமெரிக்காவின் 33 மாகாணங்களில் மெட்டா மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, குழந்தைகளையும் இளைஞர்களையும் தவறாக வழி நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. லாபம் ஈட்டுவதை மட்டுமே அந்த நிறுவனம் குறிக்கோளாக கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அந்த தளங்களை குழந்தைகள், இளைஞர்கள் அதிக நேரம் பயன்படுத்துவதால் விளம்பரம் உள்ளிட்ட லாப நோக்கங்களுக்கான அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்விலும், குழந்தைகளுக்கு மன அழுத்தம், பதற்றம், பயம், தூக்கிமின்மை, ஆரோக்கிய குறைபாடு, உள்ளிட் எதிர்மறை நிகழ்வுகளுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பதின்ம வயதினரை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருப்பதில் உறுதியாக இருப்பதாகவும், இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவாக 30 க்கும் மேற்பட்ட கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.