ரூ.294 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதை மருந்துகள் மற்றும் 80.2 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு!
Mar 15, 2026, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.294 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதை மருந்துகள் மற்றும் 80.2 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் டெல்லி சுங்கத் தடுப்பு மண்டலம் ரூ.294 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதை மருந்துகள் மற்றும் 80.2 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை அழித்துள்ளது.

டெல்லியில் சுங்க தடுப்பு மண்டலம்,  ரூ.284 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் ரூ.9.85 கோடி மதிப்புள்ள 80.2 லட்சம் வெளிநாட்டு மூல சிகரெட்டுகளை பாதுகாப்பான முறையில் அழித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா, சட்டவிரோத பொருட்களை அழிப்பது, சிறப்பு இயக்கத்திற்கு வெளியேயும் சுங்கத் துறையால் மேற்கொள்ளப்படும்  தொடர்ச்சியான நடைமுறையாகும்.  இருப்பினும், சிறப்பு இயக்கம் இந்த நடைமுறைக்கு ஊக்கமளித்துள்ளது என்றார்.

தசரா பண்டிகையின் போது சட்டவிரோத பொருட்களை அழிப்பதற்கும்   ராவணனை எரிப்பதற்கும் இடையிலான ஒற்றுமையை சுட்டிக்காட்டினார். இன்றைய நடவடிக்கைகள் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கின்றன என்றும், இளைய தலைமுறையினரைக் காப்பாற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர துறையின் உறுதிப்பாட்டை  வலியுறுத்தினார்.

இன்று அழிக்கப்பட்ட  போதைப் பொருட்களில் 29 கிலோ ஹெராயின், 6 கிலோ கோகைன், 7 கிலோ ஆம்பெடமைன் மற்றும் ‘காதா எடுலிஸ்’ என்று அழைக்கப்படும் 286 கிலோ காட் இலைகள் அடங்கும். இன்று அழிக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளில் பெரும்பகுதி 2018 ஆம் ஆண்டிலும், சிறிதளவு 2023-ம் ஆண்டிலும் பறிமுதல் செய்யப்பட்டவை.

சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (கோட்பா), 2003 ஐ மீறி இந்தியாவுக்குள் கடத்தப்பட்டதால் இந்த சிகரெட்டுகள் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

2023 அக்டோபர் மூன்றாவது வாரத்தில் 8,308 கோப்புகள் அகற்றப்பட்டு, 9,304 கிலோ தேவையில்லாப் பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டு, 46,565 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

Tags: drugs issue
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான 2-வது ஆலோசனை கூட்டம்!

Next Post

குழந்தைகள், இளைஞர்களின் மன நலம் பாதிப்பு!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies