நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வருவார் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். நாடு சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து செங்கோல் பெறப்பட்டதாக தெரிவித்தார்.
சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்கு பின் மீண்டும் நம்மிடம் இருந்து செங்கோல் பெறப்பட்டு புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது நமக்கு கிடைத்த பெருமை என்றும், நாட்டில் மீண்டும் செங்கோல் ஆட்சி வந்துள்ளதாகவும், எனவே நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என்றும் திருவாவடுதுறை ஆதினம் தெரிவித்துள்ளார்.