கனடா நாட்டிற்குச் செல்லும் பொது மக்களின் நலன் கருதி விசா சேவையை இந்தியத் தூதரகம் இன்று முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கனடா நாட்டில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொய்யான குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குப் இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் பணியாற்றிய கனடா தூதர்களை அந்நாடு திரும்ப அழைத்துக் கொண்டது. அதேபோல, கனடாவில் பணியாற்றிய இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகக் கனடா நாட்டினருக்கான விசா சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கனடா அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, விசா சேவையை இந்தியத் தூதரகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.