உலக கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான 25ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
உலக கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி தற்போது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்றது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
முதல் ஓவரை தில்ஷன் மதுஷங்கா வீசினார். போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜானி பேர்ஸ்டோவ் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க வேண்டியது. ரெவியூ எடுக்காததால் அவுட்டிலிருந்து தப்பித்தார்.
அதன் பிறகு அவர் 30 ரன்கள் சேர்த்து கசுன் ரஜீதா பந்தில் ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 28 ரன்களில் ஏஞ்சலோ மேத்யூஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜோ ரூட் 3 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஜோஸ் பட்லர் 8, லியாம் லிவிங்ஸ்டன் 1, மொயீன் அலி 15, கிறிஸ் வோக்ஸ் 0 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பென் ஸ்டோக்ஸ் கடைசியாக 43 ரன்களில் ஆட்டமிழக்க, டேவிட் வில்லி 14 ரன்களிலும், அடில் ரஷீத் 2 ரன்னிலும், மார்க் வுட் 5 ரன்னிலும் ஆட்டமிழக்கவே இங்கிலாந்து 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தால் நெட் ரன் ரேட் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான பேட்டிங் ஆர்டர் வைத்துள்ள இங்கிலாங்கிலாந்து இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பியுள்ளது.