மேம்பாலத்தில் பறந்த பாலஸ்தீனக் கொடி: கோவையில் பரபரப்பு!
Sep 10, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேம்பாலத்தில் பறந்த பாலஸ்தீனக் கொடி: கோவையில் பரபரப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 06:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் போர் நடந்து வரும் நிலையில், கோவை உக்கடம் மேம்பாலத்தில் பாலஸ்தீனக் கொடி கட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொலைவெறித் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், வெளிநாட்டினர் மற்றும் இஸ்ரேலியர்கள் என 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாகவும் பிடித்துச் சென்றனர்.

இதற்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காஸா நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. 6,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,000-த்தைத் தாண்டி இருக்கிறது. 20-வது நாளாக இன்றும் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் விடமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்திருக்கிறார்.

இப்போரில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட கிறிஸ்தவ நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதேசமயம், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இதனிடையே, இப்போரை நிறுத்த கோரியும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 24-ம் தேதி கோவை உக்கடம் பகுதியில் அனைத்து ஜமாத், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பு மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் அனைத்து ஜமாத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், போராட்டத்தின்போது போராட்டம் நடந்த இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மீது சிலர் பாலஸ்தீனக் கொடியை கட்டி இருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, உக்கடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அபுதாகீர், ரபீக் ஆகியோர் பாலஸ்தீன கொடியை கட்டியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, உக்கடம் காவல்துறையினர் சபீர் அலி, அபுதாகீர், ரபீக் ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

Tags: kovaiPalasteneFlag
Share
Tweet
SendShare
Previous Post

ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

Next Post

உலக கிரிக்கெட் போட்டியில்156 ரன்கள் எடுத்த இங்கிலாந்து!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies