கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒருநாள் பயணமாக மகாராஷ்டிரம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபாவின் கோயிலில் வழிபாடு செய்தார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர் , நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது, “சாய்பாபாவின் ஆசியுடன், 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும். மகாராஷ்டிரா 5 தசாப்தங்களாக காத்திருக்கும் நில்வண்டே அணையின் பணியும் இன்று நிறைவடைந்துள்ளதாக கூறினார். இங்கு ‘ஜல் பூஜான்’ நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது எனது கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
எங்கள் அரசு சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற மந்திரத்தை பின்பற்றுவதாகவும், ஏழைகளின் நலன்களுக்கு மத்திய முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், அரசின் பட்ஜெட்டில் ஏழைகளின் நலன்களுக்காக ஒதுக்கப்படும் நிதியும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
இன்று மகாராஷ்டிராவில் 1.10 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் நீங்கள் புள்ளிவிவரங்களை கேட்டிருப்பீர்கள் என்றும், ஆனால் அந்த ஆட்சியில் பல லட்சம் ஊழல், பல கோடி ஊழல், பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக கூறினார்.
ஆனால் தற்போதைய ஆட்சியில் அது நடக்கிறதா என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் கிசான் சம்மன் திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.