பாகிஸ்தானில் பொறியியல் படிப்பு படித்த பெண்களில் 70 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த கேலட் பாகிஸ்தான் மற்றும் பிரைட் என்ற நிறுவனங்கள் சார்பில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
குறிப்பாக, பெண்களின் நிலை குறித்த ஆய்வு நடைபெற்றது. இதில், பாகிஸ்தானில் உள்ள பெண்கள் கல்வி அறிவு சதவீதம் சற்று உயர்ந்துள்ளது.
மேலும், படித்து முடித்து வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவீதம் என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் வேலைக்குச் செல்லும் பெண்கள், வேலைக்குச் செல்லாத பெண்கள், மற்ற செயல்பாடுகளை முன்னெடுக்கும் பெண்கள் என 3 பிரிவுகளாகப் பிரித்து டேட்டா வெளியாகியுள்ளது.
அதன்படி, 2020 – 2021 -ம் ஆண்டில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பெண்கள் 28, 920 என்றும், இதில் 50.9 சதவீதம் பெண்களுக்கு வேலை செல்லவில்லை என்றும், காரணம், 20.9 சதவீதம் பெண்களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என்றும், 28 சதவீதம் பெண்கள் மட்டுமே வேலைக்குச் சென்று வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கிராமப்புறங்களில் 28.1 சதவீதம் பெண்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். பெரிய நகரங்களில் வசிக்கும் 78. 9 சதவீதம் பெண்கள் படிப்பறிவு பெற்றுள்ளனர்.
இதில், 25 முதல் 34 வயது வரையிலான பெண்கள் 50.9 சதவீதம் பட்டம் பெற்றுள்ளனர். 35 வயது முதல் 44 வயது வரை உள்ள பட்டம் பெற்ற பெண்கள் 21.7 சதவீதமாக உள்ளனர்.
பாகிஸ்தானில் பெண்களுடைய கல்வி முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டு உள்ளது அந்த நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால், படித்து, பட்டம் பெற்ற பெண்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், பெண்களின் பொருளாதார நிலை கீழ் நோக்கிச் சரிந்துள்ளது. இது பாகிஸ்தான் அரசின் தோல்வியை காட்டுகிறது என பெண்கள் சமூக அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.