அரசுப் பள்ளியில் புகுந்து மாணவர்களிடம் நீட்டுக்கு எதிராக தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கையெழுத்து வாங்கியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என அரசு பள்ளியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா வலியுறுத்தும் காணொலியை தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்து, இதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
The desperation of DMK to legitimise their anti-NEET propaganda has let them into govt schools now. TN CM Thiru @mkstalin should understand that schools are not his political stage to advance his son’s nonsensical programmes.
DMK MLA Prabhakar Raja enters a classroom uninvited… pic.twitter.com/b7PhoftNGC
— K.Annamalai (@annamalai_k) October 26, 2023
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
நீட் எதிர்ப்பு பிரசாரத்தை தி.மு.க., தற்போது அரசு பள்ளிகள் வரை கொண்டு சேர்த்துள்ளது. பள்ளிகள் ஒன்றும் அரசியல் மேடைகள் அல்ல என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். அவரது மகனின் முட்டாள்தனமான திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது.
அரசுப் பள்ளிக்கு சென்ற தி.மு.க., எம்எல்ஏ பிரபாகர் ராஜா, நாளைய டாக்டர்களாக வேண்டிய மாணவர்களிடம் நீட் தேர்வு எதிராக தற்கொலை எண்ணத்தை தூண்டும் விஷமப் பிரச்சாரம் செய்துள்ளார். இளம் மாணவர்களின் மனதில் திமுக ஏன் தற்கொலை என்ற எண்ணத்தை விதைக்கிறது?.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட்டுகளுக்கு பணம் பெறுவதை நீட் தேர்வு தடுப்பதால், அதனை திமுகவினர் தடுக்கின்றனர். அண்மையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் திமுக எம்பியின் மருத்துவக் கல்லூரியில் போலி ரசீது மூலம் 400 கோடி ரொக்கப் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தி.மு.க., இந்த கேவலமான அரசியலை நிறுத்திவிட்டு, நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது என்பதை தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.