உணவு பொருட்கள் விநியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்பிரியா மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஜோதிப்பிரியா மாலிக். இவர் உணவுத்துறை அமைச்சராக இருந்த போது உணவு பொருள் வினியோகத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஜோதிப்பிரியா மாலிக் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து இன்று காலை அவரை கைது செய்தனர்.
கடந்த வாரம் அமைச்சருக்கு நெருக்கமான ரகுமான் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், தற்போது ஜோதிப்பிரியா மாலிக் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.