கடமைகளில் கவனம் செலுத்துதல் என்ற தலைப்பில் கடிதம் எழுதி அனுப்பிய 10-ஆம் வகுப்பு மாணவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த பொன்னம்பலம்-வனிதா தம்பதியின் மகன் அபினவ்யஸ்வந்த். இவர் தேவதானப்பட்டியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக “தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பரிக்ஷாபே சச்சா 2023 என்ற நிகழ்ச்சியில் அபிபினவ்யஸ்வந்த் கலந்து கொண்டார்.
அதில் அறிவிக்கப்பட்ட கட்டுரை போட்டியில் கடமைகளில் கவனம் செலுத்துதல் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி சமர்ப்பித்திருந்தார். அதனைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது, உங்களைப் போன்ற இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆற்றல், தன்னம்பிக்கை, திறன்களைப் பார்க்கும்போது மிகுந்த பெருமிதம் அடைகிறேன்.
வாழ்க்கையில் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.