வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் கிராமத்தில் வனப்பகுதியில் கன்னி கோவில் கட்டி வழிபாடு செய்த பொது மக்களைக் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால், வனத்துறையினரை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் கிராமத்தில் மக்கள் வனப்பகுதியில் கன்னி கோவில் கட்டி உள்ளனர். வனத்துறையினர் விஜயகுமார், வெங்கடேசன், குமார் ஆகிய மூவர் மீது அனுமதி இல்லாமல் கோவில் கட்டியதாகவும், மரம் வெட்டியதாகவும் வழக்குப் போட்டு, விஜயகுமார் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கன்னி கோவிலை இடித்துவிட்டு, ஒரு நபருக்கு ஒரு லட்சம் ரூபாய், அபராதம் கட்ட வேண்டும், அப்படிக் கட்டினால் மட்டுமே அவர்களை விடுதலை செய்ய முடியும் என வனத்துறையினர் நிபந்தனை விதித்தனர்.
இதனால், ஆவேசம் அடைந்த பொது மக்கள், இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து வனத்துறையினரைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கட்டப்பட்ட கன்னி கோவிலை இடிக்க மாட்டோம் என்றும், கைது செய்யப்பட்ட விஜயகுமாரை வனத்துறையினர் விடுதலை செய்தனர்.