ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பேட்டிங்யை தேர்வு செய்தார். இதன் படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.
இதில் அப்துல்லா ஷபீக் 4 வது ஓவரில் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து 6 வது ஓவரில் இமாம்-உல்-ஹக் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அப்போது அணியின் ஸ்கோர் 38/2 ஆக இருந்தது. இவர்களைத் தொடர்ந்து பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். இருவரின் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வந்தது.
அப்போது 15 வது ஓவரில் முகமது ரிஸ்வான் 4 பௌண்டரீஸ் மற்றும் ஒரு சிக்சர் என மொத்தமாக 27 பந்துகளுக்கு 31 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது களமிறங்கினார். பாபர் ஆசாம் மற்றும் இப்திகார் அகமது நிதானமாக 10 ஓவர்கள் வரை விளையாடிவந்தனர்.
இதில் இப்திகார் அகமது 25 வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் ஓர் பௌண்டரி என மொத்தமாக 31 பந்துகளில் 21 ரன்களை மட்டுமே ஆட்டமிழந்தார்.
பின்னர் அடுத்த இரண்டு ஓவர்களில் பாபர் ஆசாம் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர்களுக்கு 65 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து சவுத் ஷகீல் மற்றும் ஷதாப் கான் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ஷதாப் கான் 39 வது ஓவரில் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 36 பந்துகளில் 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 42 வது ஓவரில் சவுத் ஷகீல் 7 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 52 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து களமிறங்கிய நவாஸ் 1 பௌண்டரி மற்றும் 2 சிக்சர் என மொத்தமாக 24 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்சி 4விக்கெட்களையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்களையும் லுங்கி என்கிடி 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
இதனால் பாகிஸ்தான் அணி 46 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப் பெற 271 ரன்கள் இலக்காக இருந்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக தேம்பா பாவுமா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். இதில் குயின்டன் டி காக் 3 வது ஓவரில் 5 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 14 பந்துகளில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக 10 வது ஓவரில் 4 பௌண்டரீஸ் 1 சிக்சர் 27 பந்துகளில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகிட்டார் களமிறங்கினர்.
இதில் ஐடன் மார்க்ராம் சிறப்பாக விளையாடி பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்கள் என அடித்து வந்தார். அவருக்கு ராஸ்ஸி வான் டெர் டுசென் ஈடு கொடுத்து விளையாடி வந்தார். பின்னர் 18 வது ஓவரில் 39 பந்துகளுக்கு 21 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரையடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 10 பந்துகளுக்கு 12 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மில்லர் 2 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 33 பந்துகளில் 29 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் சிறப்பாக விளையாடி வந்த ஐடன் மார்க்ராம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென உஸாமா பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 7 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என 93 பந்துகளில் 91 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோற்கும் நிலையில் இருந்தது. 46 வது ஓவரில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற 1 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது.
இந்த சமயத்தில் களத்தில் கேசவ் மகாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்சி இருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கேசவ் மகாராஜ் திகழ்ந்தார். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக 47.2 வது ஓவரில் முகமது நவாஸ் போட்ட பந்தை கேசவ் மகாராஜ் பௌண்டரி லைனுக்கு தட்டு 4 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.