இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா!
Sep 10, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.

இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்குள் 7,000 ஏவுகணைகள் வீசப்பட்டதால் இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதன் பிறகு, காஸா நகரின் மீது இஸ்ரேல் அசுரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 7,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், 18,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி, அரபு நாடுகள் சார்பில் ஜோர்டான் அரசு வரைவுத் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்துக்கு ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 40 நாடுகள் உத்தரவாதம் அளித்தன.

இந்த தீர்மானத்தில், ஹமாஸ் தீவிரவாதிகளால் முதலில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவர அமெரிக்கா ஆதரவுடன் கனடா முயற்சித்தது.ஆனால், இது நிராகரிக்கப்பட்டது. இதை அமெரிக்கா வன்மையாக கண்டித்ததோடு, தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தது. அதேபோல, 14 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

எனினும், தீர்மானத்தை ஆதரித்து 120 நாடுகள் வாக்களித்தன. 45 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. அதன்படி, இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருக்கிறது. வாக்கெடுப்பைப் புறக்கணித்தது குறித்து ஐ.நா. பொதுச் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜனா படேல் கூறுகையில். “கடந்த அக்டோபர் 7-ம் தேதியன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சி அளித்தன. அவை கண்டனத்துக்குரியவை.

பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். அவர்களை உடனடியாக நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்க வலியுறுத்துகிறோம். பயங்ரவாதம் வேகமாகப் பரவக் கூடியது. அதற்கு எல்லைகள் இல்லை. தேச பேதங்கள் இல்லை. இனவேறுபாடுகளும் இல்லை. ஆகவே, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உலகம் எந்தவித நியாயங்களையும் கற்பிக்கக் கூடாது. வேற்றுமைகளை விலக்கிவைப்போம். ஒன்றுபட்டு பயங்கரவாதத்துக்கு எதிரான முறைகளைக் கையாள்வோம்.

அதேசமயம், மனிதாபிமான சிக்கல்கள் கவனிக்கப்பட வேண்டும். காஸாவாசிகளுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் பொருட்டு சர்வதேச சமூகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதற்கு இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. போரில் ஈடுபட்டுள்ள இருதரப்புகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வன்முறையை விடுத்து ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். ஐ.நா. பொதுச் சபை பயங்கரவாதம், வன்முறைக்கு எதிராக அழுத்தமான செய்தியைக் கடத்தும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

ஆனால், 120 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததால், இத்தீர்மானம் ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டது.

Tags: India abstainsWARIsraelHamasUN Resolution
Share
Tweet
SendShare
Previous Post

நேற்று சந்திரயான் -3, நாளை சமுத்ரயான் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம்!

Next Post

தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி !

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies