நீட் தேர்வை நிறுத்த மந்திரவாதியை போல முட்டையை கொண்டு வருகிறார் உதயநிதி எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நாமக்கலில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
மேற்கூரையின்றி, மழை, வெயில் எல்லாம் தாங்கி, பொலிவுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் சிலை இந்தியாவிலேயே மிக உயரமானது. சந்திரயான்-3 வெற்றியில் நாமக்கல் மக்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
நிலவில் உள்ள மணல் பரப்பு தன்மை நமது நாமக்கல் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது, குறிப்பாக சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருந்து டன்னுக்கும் அதிகமாக மண் இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்ட மணலில் விக்ரம் லண்டரை தரை இறக்கி சோதித்த பிறகே விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகளாக திமுக சொன்ன, எண் : 219 – நாமக்கல்லில் குளிரூட்டப்பட்ட முட்டை சேமிப்பு கிடங்கு வசதிகள், எண் : 381 – அடிப்படை வசதிகளை செய்து, நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இருக்கத்தான் இன்னமும் நாமக்கல்லை… pic.twitter.com/DFMLfIIYWm
— K.Annamalai (@annamalai_k) October 28, 2023
ஒரு சாதாரண ஓட்டுநரின் மகளான நாமக்கல் மாணவி கனிகா, சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடினமான சோதனைகளை தாண்டி சாதனை செய்ய முடியும் என்பதற்கு மாணவி கனிகா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாமக்கல் என்றால் ஆஞ்சநேயர் கோவில் தான் ஞாபகம் வரும், இனி மாணவி கனிகா ஞாபகம் வரும் என 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் நாமக்கல் முதல் இடத்தில் உள்ளது. ஏற்றுமதி செய்யும் முட்டைகள் ஒவ்வொன்றும் சரியாக 52 முதல் 55 கிராம் எடை கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வளவு துல்லியமாக தொழில் செய்யும் மக்கள் நாமக்கல் மக்கள், நேர்மைக்கு பெயர் போனவர்கள்.
கடந்த 7 ஆண்டுகளில் போஷான் திட்டத்தின் கீழ் 2907 கோடி ரூபாய் நமது மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபின் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய நல்ல முட்டைக்கு பதிலாக அழுகிய முட்டையை தருகிறார் நம் அழுகிய முட்டை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள்.
நீட் தேர்வை நிறுத்த மந்திரவாதியை போல முட்டையை கொண்டு வருகிறார் உதயநிதி. மகாத்மா காந்தி உப்புச்சத்தியாகிரகத்தை துவக்கியபோது, வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் அதே போராட்டம் ஆரம்பித்தது. அதில் பங்கேற்ற வீரர்கள் பாடிச் செல்வதற்கு, சுதந்திர தாகத்தை ஏற்படுத்தும் ஒரு கீதமாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய ‘கத்தியின்றி இரத்த மின்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்ற பாடல் விளங்கியது.
நாமக்கல் கவிஞரின் இந்த வைர வரிகள் இன்று நமது என் மண் என் மக்கள் யாத்திரைக்கு பொருந்தும். இந்த கேடுகெட்ட, சர்வாதிகார, கொள்ளைக்கார திமுகவை விரட்டி அடிக்க இன்று தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியாக “கத்தியின்றி ரத்தமின்றி” நடைபெற்றுவரும் ஒரு யுத்தம் தான் நம் என் மண் என் மக்கள் நடைபயணம். நாமக்கல் கவிஞர் எழுதிய “ஆரியராவது திராவிடராவது” புத்தகத்தின் பக்கம் 60ல், “உண்மையில் தமிழ்நாட்டில் திராவிடர்களும் இல்லை.
ஆரியர்களும் இல்லை. இந்த திராவிடம் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது என்றால் அது அவர்களுக்கே தெரியாது. என்ன காரணத்தாலோ வட நாட்டை ஆர்யாவர்த்தம் என்றார்கள். அப்படியே தென்னாட்டை அவர்களே திராவிடம் என்று சொன்னார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒருவேளை இதனால் தான் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களின் பெயரையோ சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை போன்றவர்கள் பெயரையோ நாமக்கல் புது பேருந்து நிலையத்துக்கு வைக்க திமுக மறுக்கிறதா? ஸ்டாலின், “திமுக ஆரியத்துக்கு தான் எதிரி, ஆன்மீகத்துக்கு இல்லை” என்று சொல்கிறார்.
திமுகவின் இந்தி கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இவர் கூற்றின்படி ஆரியர்களே. பிறகு இந்தி கூட்டணியில் எதற்காக உள்ளது திமுக?
தேர்தல் வாக்குறுதிகளாக திமுக சொன்ன, எண் : 219 – நாமக்கல்லில் குளிரூட்டப்பட்ட முட்டை சேமிப்பு கிடங்கு வசதிகள், எண் : 381 – அடிப்படை வசதிகளை செய்து, நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இருக்கத்தான் இன்னமும் நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தாமல் திமுக அரசு வைத்துள்ளதா? இந்த தொகுதியின் எம்எல்ஏ திமுகவின் பி. ராமலிங்கம் மற்றும் ராஜ்யசபா எம்பி ராஜேஷ்குமார். துர்கா ஸ்டாலின் அம்மையார் எப்போது எல்லாம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு விஐபி தரிசனம் செய்து கொடுப்பதற்காக மட்டுமே ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தார்கள்.
பாராளுமன்றத்தில் பதவி ஏற்பின் போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி புகழ் பாடி, நமது முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களிடம் முதல் நாளிலே திட்டு வாங்கிய பெருமைக்கு சொந்தக்காரர் ராஜேஷ் குமார்.
தமிழகத்திற்கு நமது பாரத பிரதமர் வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று நாமக்கல்லுக்கு வழங்கப்பட்டுள்ளது, 21,947 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடுகள், 3,19,462 வீடுகளில் குழாய் குடி நீர் வசதி, 1,45,525 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,17,778 பேருக்கு இலவச சமையல் எரிவாயு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,21,516 பேருக்கு, 85,505 பேர் பிரதமரின் விவசாயிகள் நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய், முத்ரா கடன் உதவி 3422 கோடி ரூபாய் என மத்திய அரசின் நலத்திட்டங்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாத திமுக கூட்டணியை, வரும் பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாகப் புறக்கணிப்போம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர, பாஜக கூட்டணிக்கு வாக்களிப்போம் என த் தெரிவித்துள்ளார்.