மெஹ்சானாவில் சுமார் ரூ. 5800 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 30, 31 தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். 30ம் தேதி காலை, 10:30 மணிக்கு, அம்பாஜி கோவிலில் பூஜை மற்றும் வழிபாடு செய்கிறார். பின்னர் நண்பகல் 12 மணியளவில் மெஹ்சானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
அக்டோபர் 31 ஆம் தேதி, காலை 8 மணியளவில், அவர் கெவாடியாவுக்குச் செல்கிறார், அங்கு அவர் ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்கள் நடைபெறும். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,, நிறைவடைந்த புதிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், காலை, 11:15 மணிக்கு, ஆரம்ப் 5.0-ல், 98-வது பொது அடித்தளப் பாடத்திட்டப் பிரிவில் பயிற்சி பெற்ற பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.
மெஹ்சானாவில் பிரதமர்
ரயில், சாலை, குடிநீர் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற பல துறைகளில் சுமார் 5800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
கெவாடியாவில் பிரதமர்
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு உணர்வை மேலும் அதிகரிக்கும் நோக்கில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாகக் (ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்) கொண்டாட பிரதமர் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது.
அக்டோபர் 31 ம் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்துகிறார். தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பையும் அவர் பார்வையிடுகிறார், இதில் எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) மற்றும் பல்வேறு மாநில காவல்துறையின் அணிவகுப்பு பிரிவுகள் பங்கேற்கும் பெண் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த பெண்களின் இருசக்கர வாகன சாகச நிகழ்ச்சி, பி.எஸ்.எஃப்-ன் பெண்கள் பங்கேற்கும் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி, குஜராத் பெண் காவல்துறையினரின் நடன நிகழ்ச்சி, சிறப்பு என்.சி.சி நிகழ்ச்சி, பள்ளி இசைக்குழுக்களின் நிகழ்ச்சி, இந்திய விமானப்படையின் நிகழ்ச்சி, துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சியைக் காட்சிப்படுத்துதல் ஆகியவை சிறப்பு இதில் இடம்பெறும் சிறப்பு அம்சங்களாகும்.
கெவாடியாவில் ரூ.160 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.