பிரேசிலில் விமான விபத்து: 14 பேர் உயிரிழப்பு!
Aug 20, 2025, 10:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரேசிலில் விமான விபத்து: 14 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Oct 30, 2023, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரேசிலில் நேரிட்ட விமான விபத்தில், ஒரு குழந்தை உட்பட 14 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரேசில் நாட்டின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை, 2 பணியாளர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கியது. இவ்விமானம் ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசிலில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2-வது விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாநில ஆளுநர் வில்சன் லிமா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பார்சிலோஸில் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் இறந்ததற்கு நான் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேவையான உதவிகளை வழங்குவதற்கு எங்கள் குழுக்கள் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டு வருகின்றன. அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபமும், பிரார்த்தனையும் உரித்தாகுக” என்று தெரிவித்திருக்கிறார்.

பிரேசிலிய விமானப்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விபத்து விசாரணை மற்றும் தடுப்பு மையத்தின் புலனாய்வாளர்கள் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து ஆளுநர் லிமா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “விமானத்தில் இருந்து உடல்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டு விட்டன. பலியானவர்கள் பிரேசில் சுற்றுலாப் பயணிகள். இப்பகுதி அதிக மழைப்பொழிவை எதிர்கொள்கிறது. தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட பாதையில் ஏற்பட்ட பிழையே விபத்துக்கான காரணம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: accidentBrazilAir craft14 dead
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை பட்டியல்

Next Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்கு !

Related News

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் சாத்தியமில்லை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

மதுரை தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்!

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ இறுதிக்கட்ட விசாரணை!

ரயில்வே கிராசிங்கில் காத்திருப்பதை தவிர்க்க இளைஞரின் விபரீத செயல்!

காக்டூ ரக கிளிகளை பாதுகாக்கும் இந்தோனேசிய ஆர்வலர்கள்!

தமிழகத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!

ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!

சின்சினாட்டி டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்!

தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை : மத்திய அரசு விளக்கம்!

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – இந்தியாவுக்கு வெள்ளி!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம்!

ரீல்ஸ் மோகத்தில் ஆழமான பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் இளைஞர்கள்!

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies