இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்களை எடுத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி புனேவில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெறுகிறது.
இதில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னா களமிறங்கினர். இதில் திமுத் கருணாரத்னா 5 வது ஓவரில் 21 பந்துகளுக்கு 15 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் களமிறனார். பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ்ஸின் இணை சிறப்பாக விளையாடி வந்த சமயத்தில் 18 வது ஓவரில் பதும் நிசாங்கா 5 பௌண்டரீஸ் எடுத்து 60 பந்துகளில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய சதீர சமரவிக்ரமா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தது. அப்போது 27 வது ஓவரில் குசல் மெண்டிஸ் 3 பௌண்டரீஸ் என மொத்தமாக 50 பந்துகளில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து இரண்டு ஓவரிலேயே சதீர சமரவிக்ரமா 3 பௌண்டரீஸ் என மொத்தமாக 40 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ஆகா இருந்தது.
பின்னர் சரித் அசலங்கா மற்றும் தனஞ்சய டீ சில்வா ஆகியோர் களமிறங்கினர். இதில் அசலங்கா 2 பௌண்டரீஸ் என மொத்தமாக 28 பந்துகளில் 22 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் தனஞ்சய டீ சில்வா 1 பௌண்டரி அடித்து 26 பந்துகளில் 14 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அங்கேலோ மேத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா களமிறங்கினர்.
இதில் துஷ்மந்த சமீரா 1 ரன்னில் ஆட்டமிழக்க, அங்கேலோ மேத்தியூஸ் ஒரு பௌண்டரி மற்றும் ஒரு சிக்சர் என மொத்தமாக 26 பந்துகளில் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து மஹீஸ் தீக்ஷனா 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து மொத்தமாக 31 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய காசுன ரஜிதா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்களை எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஃபசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்களும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்களும் அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்காக உள்ளது.