திருமலை திருப்பதியில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் குறித்து தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில், நவம்பர் 9-ஆம் தேதி மாதாந்திர ஏகாதசி, 11-ஆம் தேதி சிவராத்திரி, 12-ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம், 13-ஆம் தேதி வரலட்சுமி விரதம், 14-ஆம் தேதி திருமலை நம்பி சாற்றுமுறை, 16-ஆம் தேதி மணவாள மாமுனி சாற்றுமுறை, 17-ஆம் தேதி நாகர் சதுர்த்தி, பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதி உலா நடைபெற உள்ளது.
18-ஆம் தேதி வருடாந்திர புஷ்ப யாகத்திற்கான அங்குரார்ப்பணம், 19-ஆம் தேதி ஏழுமலையான் கோவில் புஷ்பயாகம், 26-ஆம் தேதி கார்த்திகை மாத பௌர்ணமி, 27-ஆம் தேதி திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை, 28-ஆம் தேதி திருப்பானழ்வார் வருட திருநட்சத்திரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது என தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 85 ஆயிரத்து 497 பேர் தரிசனம் செய்தனர். ரூபாய் 2 கோடியே 41 இலட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது குறிப்பிடத்தக்கது