நாட்டின் 76 -வது சுதந்தர தினம் மற்றும் விஜய தசமியை முன்னிட்டு அக்டோபர் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதிக்கோரி அந்த அந்த மாவட்ட காவல்துறையிடம் மனு அளித்தனர். ஆனால், அது தொடர்பாக காவல்துறை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக வழக்கு கடந்த 16-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும், அணி வகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. இதனால், தமிழகக் காவல்துறை மற்றும் டிஜிபி மீது ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வழக்கறிஞர் பிரபு மனோகர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிட்டப்படு, விசாரணைக்கு வர உள்ளது. அவமதிப்பு வழக்கில் வலுவான வாதங்களை முன்வைக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு தயாராகி வருகிறது.