திமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் நிறைந்து வருகிறது என்றும், வழக்கம் போல போலி திராவிட மாடலின் சாயம் கோட்டை முதல் – நகராட்சி வரை வெளுத்துப் போய் இருக்கிறது என மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எங்கும் எதிலும் ஊழல் ஊழல் ஊழல் …!
திமுகவிடம் மக்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும்!?
சொந்தக் கட்சிக்காரரே குறை கூறும் ஒரு அவல நிலை திமுகவில் மட்டும் தான் நடக்க முடியும்.உதகையில் புதிய கடைகளை கட்டுவதற்கு, 36 கோடி ரூபாய்க்கு வசூலிக்கப்பட்டதில் முறைகேடு, இதை நான் சொல்லவில்லை… pic.twitter.com/0TNfBLetFk
— Dr.L.Murugan (@Murugan_MoS) October 31, 2023
எங்கும் எதிலும் ஊழல் ஊழல் ஊழல் …! திமுகவிடம் மக்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும்!? சொந்தக் கட்சிக்காரரே குறை கூறும் ஒரு அவல நிலை திமுகவில் மட்டும் தான் நடக்க முடியும்.
உதகையில் புதிய கடைகளைக் கட்டுவதற்கு, 36 கோடி ரூபாய்க்கு வசூலிக்கப்பட்டதில் முறைகேடு, இதை நான் சொல்லவில்லை திமுகவின் நகராட்சி கவுன்சிலரே சொல்கிறார், அதுவும் நகராட்சி கூட்டத்தில் பேசுகிறார்.
நகராட்சி தலைவர் நகராட்சி துணைத் தலைவர் ஆகியோர் குற்றச்சாட்டுக்குச் சப்பை கட்டுக் கட்டுகிறார்கள்..!
திமுக என்றால் முறைகேடு..! முறைகேடு என்றால் திமுக..! என்பதற்கு இதுவே ஒரு பிரதான உதாரணம்.
வழக்கம் போலப் போலி திராவிட மாடலின் சாயம் கோட்டை முதல் – நகராட்சி வரை வெளுத்துப் போய் இருக்கிறது.
இது தான் உங்கள் திராவிட மாடலா தமிழக முதலமைச்சர் அவர்களே…??? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.