பாஜகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்திய திமுக ரவுடி கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இல்லை எனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்குவாரி ஏலத்திற்கான ஒப்பந்தப் புள்ளி கொடுக்க வந்த பாஜகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்திய திமுக ரவுடி கும்பலை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறினால், @BJP4Tamilnadu மாநிலப் பொதுச்…
— K.Annamalai (@annamalai_k) October 31, 2023
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்குவாரி ஏலத்திற்கான ஒப்பந்தப் புள்ளி கொடுக்க வந்த பாஜகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்திய திமுக ரவுடி கும்பலை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறினால், தமிழக பாஜக சார்பாக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு
தலைமையில், நவம்பர் 3ஆம் தேதி பெரம்பலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை
தமிழக பாஜக முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.