உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், விரைவு பயணிகள் இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் பயணிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாக்ஸர் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2 -ம் தேதி மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். 1000 -த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆந்திராவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 2 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில், 14 பேர் பலியாகினர். இந்த சோகம் மறைவதற்குள் உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் விரைவு இரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகளாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூரில் இருந்து டெல்லி ஆனந்த் நகர் வரை செல்கிறது சுஹைல்தேவ் விரைவு பயணிகள் இரயில். இந்த இரயில் பிரயாக்ராஜ் இரயில் நிலையத்தில் இரயிலின் 2 பெட்டிகள் எதிர்பாராதவிதமாகத் தடம் புரண்டது.
இரயில் மெதுவாகச் சென்றதாலும் அந்த தடத்தில், வேறு இரயில்கள் ஏதும் இயக்கப்படாததாலும், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடம் புரண்ட இரயிலை மீண்டும் முயற்சியிலும், இரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகளிலும் இரயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இரயில்வே ஊழியர்களுக்கு உள்ளூர் மக்களும் உதவி செய்து வருகின்றனர்.