நரேந்திர மோடி பாரத பிரதமர் ஆன பின்பு, நாடு முழுவதும் ஆன்மீக மணம் கமழ்ந்து வருகிறது. பாரதத்தின் இறை பக்தியைக் கண்டு உலக நாடுகள் வியந்து வருகின்றன.
அந்த வகையில், தமிழகத்தில் பொது மக்களும், தமிழ் கடவுளான முருகனை நினைத்து உள்ளம் உருக வேண்டி பிரார்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னைவாசிகளுக்கு அற்புத வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும். ஒன்றல்ல, 2-அல்ல 5 திருக்கோவில்கள்.
முதலில், சென்னை பாரீஸ் கார்னரில் உள்ள அருள்மிகு கந்தகோட்டம் முருகன் திருக்கோவில், அடுத்து, தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், 3-வது, சிறுவாபுரி பாலமுருகன் திருக்கோவில், 4-வதாக, வடபழனி தண்டாயுதபாணி திருக்கோவில், 5-வதாக, தேனாம்பேட்டை பாலசுப்ரமணியம் திருக்கோவில் என ஒரே நாளில் ஆன்மீக சுற்றுலா செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் வல்லக்கோட்டை முருகன் திருக்கோவில், குன்றத்தூர் முருகன் திருக்கோவில், திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில், திருவான்மியூர் அறுபடை வீடு திருக்கோவில்களுக்கும் சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்ய 180042531111 என்ற கட்டணமில்லாத தொலைப்பேசி எண்ணிலும், 044 – 25333333 மற்றும் 25333444 என்ற தொலைப்பேசி எண்ணிலும், www.ttdconline.com என்ற இணையதளத்தின் மூலமும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.