நாட்டின் 76 -வது சுதந்தர தினம் மற்றும் விஜய தசமியை முன்னிட்டு அக்டோபர் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்காக அந்த அந்த மாவட்ட காவல்துறையிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மனு அளித்தனர். ஆனால், காவல்துறையினர் முடிவை அறிவிக்கவில்லை.
இது தொடர்பான வழக்கு கடந்த 16-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், அணி வகுப்பு ஊர்வலத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், தமிழகக் காவல்துறை மற்றும் டிஜிபி மீது ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்குச் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது உச்ச நீதிமன்றத்தில் ஏன் மேல்முறையீடு செய்துள்ளீர்கள் என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். தரப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதால், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவித்தது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளின் ரோஸ்டர் அட்டவணையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 6 -ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.