அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் குடிபெயர்வதற்காக சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து அந்நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த அக்டோபர் 2022 மற்றும் செப்டம்பர் 2023 க்கு இடையில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (UCBP) அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களில் 30,010 பேர் கனடா எல்லையிலும், 41,770 பேர் மெக்சிகோ எல்லையிலும் பிடிபட்டுள்ளனர்.
2019-20 ஆம் ஆண்டில், 19,883 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் 2020-21 ஆம் ஆண்டில் 30,662 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 63,927 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் அதிகாரிகளிடம் பிடிபடாமல் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.