ஆஸ்திரேலியா - இங்கிலாந்து : வெற்றி யாருக்கு ?
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து : வெற்றி யாருக்கு ?

தொடர் தோல்வியடைந்து வரும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறுமா ?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 12:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் முதல் பெங்களுருவில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இரண்டாம் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன. ஆஸ்திரேலியா விளையாடிய 6 போட்டிகளில் முதல் 2 போட்டியில் தோல்வியும் பின்பு விளையாடிய 4 போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதல் நான்கு இடத்தை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

அதேபோல் இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிப் பெற்று 5 போட்டிகளில் தோல்வியடைந்து 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் வார்னர், மேக்ஸ்வெல் மற்றும் ஹெட் ஆகியோர் அசத்தலான பார்மில் உள்ளன. பந்துவீச்சில் மட்டும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டி உள்ளது.

மறுமுனையில் இங்கிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தாலும், களத்தில் சிறப்பாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றனர்.

மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 155 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 87 முறையும், இங்கிலாந்து அணி 63 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிய, 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

நரேந்திர மோடி மைதானத்தில் இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளில் பேட்ஸ்மேன்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். இன்றையப் போட்டியிலும் அதிகப்படியான ரன்கள் குவிக்கப்பட வாய்ப்புள்ளது. டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்து பெரிய இலக்கை நிர்ணயிக்கவே விரும்பும்.

மேலும் இந்தப் போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் ஆஸ்திரேலியா அணி 59% வெற்றி பெரும் என்றும் இங்கிலாந்து அணி 41% வெற்றி பெரும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.

Tags: sportsnews
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 96000 இந்தியர்கள் கைது!

Next Post

உலககோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் முக்கிய வீரர் விலகல் !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies