வங்கியில் கடன் வாங்கியவர்கள் நலன் கருதி, சிறப்புச் சலுகையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதாவது, ஜனவரி 2024 முதல், வீடு, வாகனம் உள்ளிட்டவற்றுக்கு என வங்கியில் கடன் பெறும் வாடிக்கையாளர்கள், இஎம்ஐ பவுன்ஸ் ஆகிவிட்டால், ஒரு வாரத்திற்குப் பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு ஒரு வாரக் கால அவகாசம், அதாவது க்ரேஸ் பீரியட் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இஎம்ஐ தொகையைச் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்கான அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை மூலம் சுமார் 2 முதல் 3 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என இந்திய
ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கும் நிறுவனங்கள், வருடத்திற்கு ஒருமுறை இலவசமாக, கடன் தொடர்பான அறிக்கையைக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் ஒரு இணைப்பையும் வழங்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர் இலவச கடன் அறிக்கையை எளிதாகப் பெறக்கூடிய வகையில் வசதி செய்யப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு தனியார் மற்றும் அரசு வங்கிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதனால், கடனாளிகள் மேலும் கடனாளியாகாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர்.