குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு கூட்டம்
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு கூட்டம்

நவம்பர் 5 முதல் 7 வரை நடைபெறும் என அறிவிப்பு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 05:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு கூட்டம் நவம்பர் 5 முதல் நவம்பர் 7 வரை குஜராத் மாநிலம் புஜ் நகரில் நடைபெறுகிறது.

ஆர்.எஸ்.எஸ். வருடாந்திர அகில பாரத செயற்குழு கூட்டம் நவம்பர் 5 முதல் நவம்பர் 7 வரை குஜராத் மாநிலம் புஜ் நகரில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலத் தலைவர்கள், துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோஹன் பாகவத், பொதுச்செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபாலே, துணை பொதுச்செயலாளர் ஸ்ரீ D கிருஷ்ணகோபால், டாக்டர் மன்மோஹன் வைத்யா, ஸ்ரீ முகுந்தா, ஸ்ரீ அருண் குமார், ஸ்ரீ ராம்தத் சக்ரதார் மற்றும் அனைத்து அகில பாரத பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள். விஸ்வ ஹிந்து பரிஷத், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், பாரதீய ஜனதா கட்சி, பாரதீய மஸ்தூர் சங்கம், பாரதீய கிசான் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் அகில பாரத அமைப்பாளர்களுக்கு இதில் பங்கேற்பார்கள்.

இது தொடர்பாக அகில பாரத ப்ரச்சார் ப்ரமுக் (அகில பாரத ஊடகத்துறை பொறுப்பாளர்), ஸ்ரீ சுனில் அம்பேகர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்த கூட்டத்தில், சங்க வேலைகள் குறித்த ஆய்வு மற்றும் கடந்த செப்டம்பரில் புனேவில் நடைபெற்ற சங்கத்தின் பல்வேறு அமைப்புகளின் கூடுதலில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் விஜயதசமி உரையில் இடம்பெற்ற விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறினார்.

சமுதாயத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றதாக சங்க வேலைமுறைகளில் தேவையான மாற்றங்கள், உதாரணமாக சங்கத்தின் முதலாமாண்டு முகாம் இரண்டாம் ஆண்டு முகாம், மூன்றாம் ஆண்டு முகாம்களில் 2024 முதல் புதிய பாடத்திட்டங்கள் அமல் செய்யப்படும் என தெரிவித்தார்.

ஜனவரி 22 2024 அன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது, நாட்டின் ஒவ்வொரு கிராமம், நகரங்களில் உள்ள கோவில்களில் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். பின்னர் இந்த தகவல், அனைத்து ஸ்வயம்சேவகர்களுக்கும் அளிக்கப்படும், அதன் மூலம் இதில் சமுதாயமும் பங்கேற்க வழி ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரால் 1925-ல் துவக்கப்பட்ட சங்கம், 98 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 2025-ம் ஆண்டு நூற்றாண்டு வருவதையொட்டி, சங்கத்தை மேலும் விரிவுப்படுத்த வேலைகள் நடந்து வருகிறது. பலர் தங்கள் நேரத்தை கொடுக்க முன்வந்துள்ளனர், 2 ஆண்டுகளுக்கு முழுமையாக சங்க வேலை செய்ய பலர் முன்வந்துள்ளனர்.

இதை மையமாக வைத்து, தீர்மானிக்கப்பட்ட ஷாகா இலக்குகளின் நிலை குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய ஏற்கனவே யோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் இது குறித்த ஆய்வு மற்றும் அடுத்த ஒன்றரை வருடங்களில் அந்த இலக்குகளை அடைவது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்படும். இதுவரை நடந்துள்ள வேலைகள், மேலும் எவ்வாறு துரிதப்படுத்துவது போன்றவையும் விவாதிக்கப்படும். சங்க நூற்றாண்டு விழாவின் போது, அது பற்றிய புரிதலை சமுதாயத்தின் முன் எப்படி எடுத்து செல்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தனது விஜயதசமி உரையில், சர்சங்கசாலக் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) ஷாகா நடைபெறும் இடத்தை சுற்றி சமுதாய மாற்றம் ஏற்படுத்த வலியுறுத்தினார். சமூக ஒற்றுமை, சுற்றுசூழல் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு, பிளாஸ்டிக் தவிர்த்தல் மேலும் உதாரண குடும்பமாக வாழ்வது எப்படி என்று பேசினார். அத்துடன் சுதேசி, சமூக கடமை போன்றவற்றை ஸ்வயம்சேவகர்கள் தாங்கள் கடைபிடித்து, ஒரு உதாரணமாக இருந்து சமுதாயத்தையும் ஈடுபடுத்த வேண்டும் என்று பேசினார்.

நாடு முழுவதிலும் இருந்து மொத்தமாக 381 பொறுப்பாளர்கள் இந்த செயற்குழுவில் பங்கேற்பார்கள். சங்க வேலைகள் பற்றி விவாதிக்கும் போது, நடைமுறையில் சந்திக்கும் விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். நவம்பர் 5 காலை 9 மணிக்கு கூட்டம் துவங்கி, நவம்பர் 7 மாலை 6 மணிக்கு நிறைவடையும் என அவர் கூறினார்.

Tags: RSS
Share
Tweet
SendShare
Previous Post

கடன்காரர்களுக்கு ஹேப்பி நியூஸ் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியல் ( 04/11/2023 )

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies