பிரதமர் மோடியுடன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தொலைபேசியில் பேச்சு!
Sep 12, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியுடன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தொலைபேசியில் பேச்சு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 04:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் நெருக்கடி குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தொலைபேசியில் தொடர்புகொண்டு விவாதித்திருக்கிறார்.

இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில், 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது. இப்போரின்போது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட முக்கிய இலக்குகளை அழித்திருக்கிறது.

மேலும், ஹமாஸ் தீவிரவாதிகள் 500 பேர் உட்பட 9,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதோடு, காஸா நகரமே உருக்குலைந்து கிடக்கிறது. 28-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மத்திய கிழக்கு நாடுகள் எதிர்கொண்டிருக்கின்றன.

இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உலகத் தலைவர்களை தொடர்புகொண்டு இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக மேற்கு ஆசியாவில் நிலவி வரும் துயரமான சூழல் குறித்து விவாதித்து வருகிறார். அந்த வகையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் நெருக்கடி குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களைக் கண்டித்த தலைவர்கள், ஹமாஸ் பாலஸ்தீன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், பரந்த பிராந்தியத்தில் பதட்டங்களைத் தணிக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதிபலிப்பதாகவும் வலியுறுத்தினர். மேலும், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகவும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக பாரதப் பிரதமர் மோடி ஏற்கெனவே ஜோர்டான் மன்னர் மற்றும் எகிப்து அதிபருடன் தொலைபேசியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modirishi sunakBritain PMcoversation
Share
Tweet
SendShare
Previous Post

மக்களே உஷார்!: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Next Post

கடன்காரர்களுக்கு ஹேப்பி நியூஸ் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies