வாரத்தில் வெள்ளிக்கிழமை என்றாலே பெண்களுக்கு ஒருவித மகிழ்ச்சி. காரணம், அன்றைய தினம் பெண்களுக்கு விருப்பமான திருக்கோவில்களுக்குச் செல்லலாம் என்பதற்காகவும், குடும்பம், ஆரோக்கியம், செல்வம் பெருக வேண்டும் என்பதற்காகத் தன்னை வருத்திக்கொண்டு விரதம் இருப்பது வழக்கம்.
குறிப்பாக, தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி நோன்பு இருந்தால் கணவன் மற்றும் குடும்பத்தினர் நலமாக இருப்பார்கள் என்றும், மாங்கல்ய பலம் பெருகும் என்பதும் ஐதீகம்.
ஒவ்வொரு பெண்ணும் தங்கள் குல வழக்கப்படி கணவன், குடும்பம் நன்மை வேண்டி அம்மனிடம் வேண்டிக் கொள்வர். அன்றைய தினம் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும், கணவனின் ஆயுள் அதிகரிக்கும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.