மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !
Mar 15, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற 35 வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகாள் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் விளாசினர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 10 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஆனால் நட்சத்திர பந்துவீச்சாளரான ஹாரிஸ் ராஃப் 10 ஓவர்களில் 85 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பாகிஸ்தான் பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

இந்த மோசமான சாதனை 17 நிமிடங்களில் முறியடிக்கப்பட்டது. இதன்பின் பந்துவீசிய ஷாகின் அப்ரிடியின் கடைசி ஓவரில், 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் மூலமாக ஷாகின் அப்ரிடி 10 ஓவர்களில் 90 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இதன் மூலம் ஹாரிஸ் ராஃபின் சாதனையை சில நிமிடங்களிலேயே ஷாகின் அப்ரிடியால் முறியடிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தவர்கள் பட்டியலில் ஷாகின் அப்ரிடி 6வது இடத்தை பிடித்துள்ளார்.

முதலிடத்தில் முன்னாள் வீரர் வஹாப் ரியாஸ் 10 ஓவர்களில் 110 ரன்கள் விட்டுக் கொடுத்ததே சாதனையாக உள்ளது. மேலும், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகின் அப்ரிடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஷாகின் அப்ரிடி விளையாடிய கடைசி 23 ஒருநாள் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தி வந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஷாகின் அப்ரிடி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.

ஷாகின் அப்ரிடி வீசிய கடைசி ஓவரில் சான்ட்னர் கொடுத்த கேட்சையும் ஹசன் அலி தவறவிட்டார். இதன் மூலம் 23 போட்டிகளுக்கு பின் முதல்முறையாக ஷாகின் அப்ரிடி விக்கெட் வீழ்த்த முடியாமல் இருக்கிறார்.

Tags: sportsnewscricket pakistan
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் தொடரில் யார் யார் விளையாடப் போகிறார்கள் ?

Next Post

மாங்கல்ய பலம் – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies