ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய அளவிலான செயற்குழு கூட்டம் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை குஜராத் மாநிலம் புஜ் நகரில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒவ்வொரு வருடமும் ஆர்எஸ்எஸ் அகில இந்தியச் செயற்குழு கூட்டம் நவம்பர் 5 -ம் தேதி முதல் நவம்பர் 7 -ம் தேதி வரை குஜராத் மாநிலம் புஜ-ல் நடைபெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே மற்றும் அனைத்து அகில இந்தியப் பொறுப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இதில் பல்வேறு மாநிலத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அத்துடன், விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத், பாரதிய ஜனதா கட்சி, பாரதீய மூதூர் சங்கம், பாரதீய கிசான் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் அகில இந்திய அமைப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் வேலைகள் குறித்த ஆய்வு மற்றும் கடந்த செப்டம்பரில் புனேவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ்-ன் பல்வேறு அமைப்புகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆர்எஸ்எஸ் தலைவரின் விஜயதசமி உரையில் இடம் பெற்ற விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
அத்துடன், 2024 -ம் ஆண்டு ஜனவரி 22 -ம் தேதி அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகம் உள்ளிட்ட முக்கிய விசயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.