காங்கிரஸ் "4 சி" பார்முலாவில் செயல்பட்டது: ம.பி.யில் அமித்ஷா தாக்கு!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் “4 சி” பார்முலாவில் செயல்பட்டது: ம.பி.யில் அமித்ஷா தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேச விரோத சக்திகளை திருப்திப்படுத்தும் அரசியலையே காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கிறது. மேலும், ஊழல், கமிஷன், வகுப்புவாதம் மற்றும் சட்டவிரோத அரசியல் ஆகிய ‘4 சி’ பார்முலாவில் செயல்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு வரும் 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால் இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சி செய்தபோதெல்லாம் தங்களது கஜானாவை நிரப்ப மட்டுமே வேலை செய்தது. அதேசமயம், பா.ஜ.க. வளர்ச்சிக்காக பாடுபட்டது. இன்று கமல்நாத்துக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால் அவர் பதில் சொல்ல வேண்டும்.

2002-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு வெளியேறிய போது, ​​இம்மாநிலத்தின் பட்ஜெட் வெறும் 23,000 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 18 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இம்மாநிலத்தின் பட்ஜெட் இன்று 3.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஆகவே, ஓட்டுப் போடும்போது, ​​எம்.எல்.ஏ., முதல்வர் அல்லது பா.ஜ.க.வை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக வாக்களிக்கிறோம் என்று நினைக்க வேண்டாம்.

வாக்களிக்கும்போது ​​இரட்டை இன்ஜின் அரசு மத்தியப் பிரதேசத்தை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மத்திய பிரதேசத்தை பல ஆண்டுகளாக இருளில் மூழ்கடித்த காங்கிரஸ் ஒரு பக்கம். 18 ஆண்டுகளில் விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக பாடுபட்ட பா.ஜ.க. அரசு மறுபக்கம். ஆகவே, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இங்கு யாருடைய ஆட்சி அமைய வேண்டும் என்பதை உங்கள் ஒரு வாக்கு உறுதி செய்ய வேண்டும்.

தேச விரோத சக்திகளை திருப்திப்படுத்தும் அரசியலை காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கிறது. ஊழல், கமிஷன், வகுப்புவாதம் மற்றும் சட்ட விரோத அரசியல் ஆகிய ‘4 சி’ பார்முலாவில் காங்கிரஸ் செயல்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ​​பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்து ‘அலியா, மாலியா, ஜமாலியா’ போன்றோர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். அப்போது, அவர்களுக்கு எதிராக மன்மோகன் சிங் அரசு எதுவும் செய்யவில்லை.

அதேசமயம், உரி மற்றும் புல்வாமாவில் தாக்குதல் நடத்திய 10 நாட்களுக்குள் பிரதமர் மோடி வான்வழி தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார். மேலும், காங்கிரஸ் கட்சி கமல்நாத்தை முதல்வராக்க நினைக்கிறது. ஆனால் அவரோ, அவரது மகன் நகுல்நாத்தை முதல்வராக்க நினைக்கிறார்.

அதேபோல, சோனியா காந்தியின் நோக்கம் தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பதுதான். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் அரசால் மட்டுமே மத்தியப் பிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்” என்றார்.

Tags: Home ministerMadya Pradeshelection compaignAmit sha
Share
Tweet
SendShare
Previous Post

உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி!

Next Post

ஆர்எஸ்எஸ் செயற்குழு கூட்டம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies