விராட் கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவரது மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
கிரிக்கெட்டில் அசைக்க முடியாத ஒரு இடத்தில் நிலைத்திருப்பவர் தான் விராட் கோலி. அவர் களத்தில் இறங்கினால் அவரை கண்டு பயப்படாத பந்துவீச்சாளர்கள் இல்லையென்றும் சொல்லலாம்.
அந்த அளவிற்கு பேட்டிங்கில் பல சாதனைகளை புரிந்துவரும் கிங் கோலியின் பிறந்த நாள் இன்று. அவரின் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக இந்தியாவின் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் விராட் கோலியின் படத்தை மணலில் வடிவமைத்துள்ளார்.
இதில் மணலில் பேட்டை வடிவமைத்து அந்த பேட்களுக்கு மேலே விராட்டின் படத்தை வரைந்து, அதற்கு கீழே பந்துகளால் விராட் என்று எழுதியுள்ளார். மேலும் ‘ஹாப்பி பர்த்டே’ என்றும் எழுதி தனது பிறந்த நாள் வாழ்த்தை தன்னுடைய மணல் சிற்பக் கலையின் மூலம் தெரிவித்துள்ளார்.