ஒவ்வொரு வாக்கும் வளமான மிசோராம் அமைய அடித்தளம் அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதற்காக 1276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 525 நகர்ப்புறங்களிலும், 751 கிராமப்புறங்களிலும் உள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மிசோராமில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு வாக்கும் ஒரு வளர்ந்த மற்றும் வளமான மிசோராமுக்கு அடித்தளம் அமைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.